×

சிவகங்கை அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா-அயிரை, கெளுத்தியை அள்ளினர்

சிவகங்கை : சிவகங்கை அருகே கோமாளிபட்டி கிராமத்தில் மீன்பிடித்திருவிழா நடந்தது.சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் சின்னக்கடம்பன்குடி கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில் பெய்த மழையால் கண்மாயில் தண்ணீர் நிரம்பியிருந்தது. தற்போது விவசாயத்திற்கான நீர் பாய்ச்சும் தேவை முடிவடைந்த நிலையில் கண்மாயில் குறைவான நீர் மட்டுமே இருந்தது. இந்நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை பிடிப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து கோமாளிபட்டி, சாலூர் மற்றும் அருகாமை கிராமங்களில் உள்ள கிராமத்தினர் ஏராளமானோர் கண்மாய் பகுதியில் நேற்று திரண்டனர். காலை 10 மணி முதல் சுமார் 3 மணி நேரம் நடந்த மீன் பிடித்திருவிழாவில் சேலை, வேட்டி உள்ளிட்ட துணிகளை கொண்டு மீன் பிடித்தனர். இதில் அயிரை, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன….

The post சிவகங்கை அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா-அயிரை, கெளுத்தியை அள்ளினர் appeared first on Dinakaran.

Tags : kanmai ,sivaganga ,irai ,cataluthi ,Sivagangai ,Komalipatti ,komalipatti chinnakadambankudi kammai ,Ikkanmai ,Kanmail Fishing Festival-Ayra ,Sivakanga ,Caterie ,
× RELATED சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில்...